Download the Free PDF of Kedara Gowri Vratham Full Story in Tamil
Hi, today we are going to share with you all கேதார கௌரி விரதம் கதை in Tamil கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு.
கேதார கௌரி விரதம்
முன்னொரு காலத்தில் பிருங்கி என்னும் பெயருடைய முனிவர் வாழ்ந்து வந்தார். அம்முனிவர் திருக்கைலாயத்திலே சிவபெருமானை வணங்கச் சென்றிருந்தார். அங்கு சிவபெருமானும் பார்வதிதேவியாரும் வீற்றிருந்தனர்
பிருங்கி முனிவர் சர்வமும் சிவமயம் என்னும் கொள்கையுடையவர். சிவனை மட்டுமே வணங்குபவர். ஆதலால் வண்டு உருவம் எடுத்துப் பரமேஸ்வரரை மாத்திரம் வலம் வந்து வணங்கினார். பார்வதியை அவர் வணங்கவில்லை. இதைக் கண்ட பார்வதிதேவியார் ஆத்திரமடைந்தார். அவர் பிருங்கி முனிவரின் சக்தியை இல்லாமல் செய்து விட்டார். சக்தியை இழந்த முனிவர் நிற்க முடியாமல் தடுமாறினார். அவர் தடுமாறுவதைக் கண்ட சிவபெருமான் அம் முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அனுப்பினார்
பார்வதிதேவியார் தான் தனித்து இருந்தமையிலேயே தன்னைப் பிருங்கி முனிவர் வணங்கவில்லை என்பதை உணர்ந்தார். கோபத்தோடு பூலோகம் சென்று கௌதம முனிவரின் நந்தவனத்தில் அதனால் அமர்ந்தார். கௌதம முனிவர் அவரைத் தனது ஆச்சிரமத்தில் இருக்கச் செய்தார்
பிருங்கி முனிவர் தன்னை வணங்காமல் சென்றதாலேயே தாம் பூலோகம் வந்ததாகப் பார்வதிதேவியார் கூறினார். கௌதம முனிவர் பார்வதிதேவியைப் பார்த்து “அம்மையே எவருமே அனுட்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அவ்விரதத்தினைத் தாங்கள் அனுட்டித்தால் இறைவனுடன் சேர்ந்து இருக்கலாம்” என்று கூறினார்
பிருங்கி முனிவர் தன்னை வணங்காமல் சென்றதாலேயே தாம் பூலோகம் வந்ததாகப் பார்வதிதேவியார் கூறினார். கௌதம முனிவர் பார்வதிதேவியைப் பார்த்து “அம்மையே எவருமே அனுட்டிக்காத விரதம் ஒன்று உள்ளது. அவ்விரதத்தினைத் தாங்கள் அனுட்டித்தால் இறைவனுடன் சேர்ந்து இருக்கலாம்” என்று கூறினார்
விரதம் அனுட்டிப்போர் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர். விரதத்தின் முதல்நாள் அன்று இருபத்தோரிழைகள் கொண்ட நூற்கயிற்றில் மஞ்சள் பூசி முதல் முடிச்சை இட்டு பூசையில் வைப்பர். அதனைத் தொடர்ந்து விரதநாட்கள் முடியும் வரை ஒவ்வொரு நாளும் ஒரு முடிச்சிடுவர். அதேவேளை பழம், பாக்கு, வெற்றிலை. அதிரசம், மஞ்சன் ஆகியவற்றில் ஒவ்வொன்றை வைத்து இருபத்தொரு நாட்களும் வழிபடுவர். பூசையில் வைத்த இந்த நோன்பு நூற்கயிற்றை ஆண்கள் வலது கையிலும். பெண்கள் இடது கையிலும் இருபத்தொராவது நாள் தரித்துக் கொள்வர்
இருபத்தொரு நாட்களும் விரதம் அனுட்டிப்பவர்கள் முதல் இருபது நாட்களும் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் ஒரு நேர உணவை மட்டும் உட்கொள்வர். இறுதி நாளாகிய சதுர்த்தசியில் உபவாசம் இருந்து மறுநாள் அதிகாலையில் பாரணை பண்ணுவர்
இவ்விரதத்தினை முறைப்படி அனுட்டித்தால் இறையருள் இன்பம் அடையலாம்